பகலோ, இரவோ அதையெல்லாம் சட்டை செய்யாமல் நம்முடைய நுரையீரல் ஒரு நாளைக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சுவாசித்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்துத் தருகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைப் பிரித்து, வெளியே அனுப்புகிறது. இதனிடையே நல்ல காற்றில் 20.94 சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது. காற்று மாசடைவது காரணமாக காற்றில், நச்சான வேதிப் பொருட்களின் அளவு அதிகரித்துவிட்டன. மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல். நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய், நுரையீரல் சளி, புற்றுநோய் ஆகிய நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நுரையீரல் குறித்து நம்மிடம் விரிவாக பேசிய தென்காசி அரசு மருத்துவமனை டாக்டர் செல்லப்பா, “நாம் பருகும் நீர் மிக சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கிறோம்? சாப்பிடும் உணவு சத்தானதா, ஆரோக்கியமானதா, கலப்படமற்றதா, இயற்கையானதா என்று தேடி தேடி ஆராய்கிறோம்? ஆனால், நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு தீங்கானது, அதில் கலந்திருக்கும் நச்சை வெளியேற்ற நம் நுரையீரல் எவ்வளவு சிரமப்படுகின்றது என்பதை நாம் பெரும்பாலும் சிந்தித்து பார்ப்பதில்லை.

பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் தூசு, குப்பை, செல்போன் அலைவரிசை, டிவி அலைவரிசை, சேட்டிலைட் அலைவரிசை, காற்று சம்பந்தப்பட்ட எல்லா பொருள்களும் வைரஸ், பாக்டீரியா மற்றும் அனைத்து பொருள்களும் உள்ளன. மூக்கின் வழியாக உள்ளே செல்லும் காற்று நுரையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் காற்றிலுள்ள காற்று சம்பந்தப்பட்ட பொருள்களான ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற பொருள்களை எடுத்து நுரையீரல் இரத்தம் மூலமாக உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் செல்லும் நல்ல காற்று, கெட்ட காற்றாக மாறி வெளியே தள்ளுகிறது. உதாரணமாக, ஆக்ஸிஜன் ஒரு செல்லுக்குள் செல்லும் பொழுது கார்பன்-டைஆக்சைடு ஆக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. உபயோகிக்கப்பட்ட காற்று, இரத்தம் வழியாக மீண்டும் நுரையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் மூக்கு என்ற பாதை வழியாக வெளியே செல்கிறது. எனவே, நுரையீரல் என்பது உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நல்ல காற்று என்ற உணவை உள்ளே செலுத்தி கெட்ட காற்றை மூக்கின் வழியாக வெளியே தள்ளுகிறது.

கொஞ்சம் சிம்பிளாக நுரையீரல்களின் செயல்பாடுகளின் செயல்பாடு இதுதான்:

1) ஆக்ஸிஜனை செல் திசுக்களுக்கு தருவதும் மற்றும் கரிய அமில வாயுவினை திசுக்களில் இருந்து வெளியேற்றுவதும்.

2) வாயு பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துதல் மூலம் உடம்பில் தட்பவெப்ப நிலையினை சமன் செய்கிறது. (அதிக வெப்பத்தை காற்றில் வெளியிடுவது மூலம்)

3) இரத்த ஓட்டத்திற்கு உதவியாக இருத்தல் மற்றும் இரத்தத்தில் உள்ள PH-ஐ (காரத்தன்மை) சமநிலைப்படுத்துகிறது.

4) இதய துடிப்பிற்கும், இதயத்தில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உதவியாக இருத்தல் மற்றும் உடலில் நீர் அளவினை சமன்படுத்துகிறது.

அடுத்து, நுரையீரலின் மூலம் பெறப்படும் சுவாசம் -- சுவாச முறை என்பது உடம்பில் உள்ள செல் திசுக்களுக்கும் மற்றும் வெளி சுற்று சூழ்நிலைகளுக்கும் இடையே ஏற்படும் காற்றுகளின்-வாயுக்களின் பரிமாற்றம் ஆகும். ஆக்ஸிஜனை உடல் திசுக்களுக்கு செலுத்தியும் கரிய அமில வாயுவை வெளியேற்றும் நிகழ்வு, சுவாச முறையினால் மட்டுமே நடைபெறுகிறது. சுவாச முறை பல வகைப்பட்டாலும் வயீற்று சுவாசம் மற்றும் மார்புச் சுவாசம் மிக முக்கியனமானது.

வயிற்றுச் சுவாசம் அல்லது ஆழ்ந்த சுவாசம்

உதரவிதானம் முழுவதுமாக சுருங்குவதால் வயிற்றுச் சுவர் வெளிநோக்கி அசைகிறது. இவ்வகைச் சுவாசத்தை குழந்தைகளிடம் காணலாம். ஒரு அறுவை சிகிச்சை அல்லது பிரசவத்திற்க்குப் பின்னர் அதை ஒரு நல்ல உடற்பயிற்சியாகக் கொள்ளலாம்.

மார்புச் சுவாசம்

வயிற்றுச் சுவர் சிறிதளவு அசைவது அல்லது சிறிது கூட அசையாமல் மார்பு மட்டும் அசைந்து நடைபெறுமானால் அது மார்புச் சுவாசம் ஆகும். பொதுவாக எப்போதும் நடைபெறும் சுவாசம் இவ்விரண்டு வகைகளும் கலந்த வகையாகும்.

சாதாரணமாக, ஒரு நிமிடத்திற்குப் பதினெட்டு அல்லது இருபது முறை சுவாசம் நிகழ்கிறது. குழந்தைகள் இன்னும் வேகமாகச் சுவாசிக்கின்றன. குழந்தையின் தேவைகளுக்கேற்ப சுவாசத்தின் வேகத்தில் மாறுதல்கள் ஏற்படலாம். மூளையின் அடிப்புறத்தில் உள்ள சுவாச மைய என்னும் ஒரு தனி நரம்பு மையத்தின் மூலம் சுவாசத்தின் ஆழமும், வேகமும் கட்டுபடுத்தப்படுகின்றன. இரத்த ஓட்டத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு பற்றிய செய்திகள் இந்த மையத்திற்கு வந்து சேருகின்றன. எடுத்துக்காட்டாக உடற்பயிற்சியின்போது தசையினால் அதிகமான கழிவு உண்டாக்கப்படுகிறது. இந்தச் செய்கையின் பயனாக சுவாச மையம் சுவாசத் தசைகளை மேலும் அதிகமாகச் செயல்பபடும்படியாக நரம்புகளின் மூலமாக ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக உடற்பற்சியின்போது நாம் மிக வேகமாகவும், ஆழ்ந்தும் சுவாசிக்கிறோம். உறக்கத்தின் போது உடல் ஓய்வாக இருப்பதனால் குறைவாகவே ஆக்சிஜன் தேவைப்படுகிறது, ஆகவே சுவாசம் மெதுவாக நடைபெறுகிறது.

விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை.......நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து, காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா. நோயாளிகள் இந்த நேரத்தில்தான் மிகவும் சிரமப்படுவார்கள்.

அடுத்து, மிக முக்கியமாக, நுரையீரல்கள் தான் குழந்தை பிறந்ததும் இயக்கம் பெறக்கூடிய ஒரே உறுப்பாகும். அதாவது, உயிரோட்டத்திற்கு உயிர் கொடுக்கக்கூடிய உறுப்பு என்றால் மிகையாகாது. நுரையீரல்கள் வாயு மண்டலத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால், காற்று எனும் மூலப்பொருளுக்கு உரிய உறுப்பாக இருக்கிறது. சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் பிராண சக்தியைக் கொண்டுள்ளது. ஆழமான, சீரான சுவாசத்தின் மூலம் நிறைய பிராண சக்தி உள்ளே சேருகிறது. அது நமது உடலுக்குள் வளமான சூழ்நிலையை உண்டாக்குகிறது. இந்த வளமைதான் வாழ்வதற்க்கான தூண்டுதலையும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் உண்டாக்குகிறது.

மேலும், மனதளவில் ஒருவருக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டால், அவருக்குள் ஒரு வெறுமை உணர்வு உண்டாகி, வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும். என்ன பணி செய்தாலும், யாருடன் பழகினாலும், அதில் திருப்தி இருக்காது. மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். தனக்கு நல்லது செய்பவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பார். அவரைப் பற்றிக் கேவலமாக மற்றவர்களிடம் விமர்சிப்பார். தன் மீதே கூட அவருக்கு மரியாதை இருக்காது. ‘நான் ஒரு முட்டாள்’ நான் ஒரு முண்டம்’ நான் ஒரு வீணாப் போனவன்’ என்று தன்னைப் பற்றிப் தானே விமர்சனம் செய்து கொள்வார். இது மனரீதியாக உணர்வு புலன்களின் பாதிப்பால் உண்டாகும் நோய்கள்.

மேலும் நுரையீரலில் உள்ள பிரச்சனைக் காரணமாக உடம்பில் ஒரு பகுதியான தோலில் பாதிப்பு உண்டாகும். இந்தத் தோல் தான் நமக்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையில் உள்ள வரையறை. இந்த வரையறைக்குள் இருந்து கொண்டுதான் நாம் சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொள்கிறோம். ஆகவே, சுற்றுப்புறச் சூழ்நிலை, நமக்கு ஒவ்வாமையை (அலர்ஜியை) உண்டு பண்ணினால், அது நமது நுரையீரலை மட்டுமன்றி தோலையும் பாதித்து, தோல் வியாதிகளை உண்டாக்கும்.

நுரையீரல் பலவீனத்தால், சுற்றுப்புறச் சூழ்நிலை மட்டுமின்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்கூட அலர்ஜியை உண்டு பண்ணுவார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்ள முடியாது. என் வீட்டு வாசலில் எதுக்கு வண்டியை நிறுத்துறே! எதுக்குக் குப்பையைக் கொட்டுறே! என்று அடிக்கடிச் சண்டைக்கு போவார்கள். பிறகு தோலை ஆரோக்கியமாக பராமரிக்கும் எண்ணம் கூட இல்லாமல் இருக்கும். தொடர்ந்து ஒரு வாரம் கூட குளிக்க மாட்டார்கள். அழுக்கான ஆடை அணிந்திருப்பார்கள், தாடியும், மீசையுமாக அலைவார்கள்” என்று விவரித்தார்.

மேலும், “நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், "கன்ட்ரோலர்' மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும்; பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியும். தற்போது நிலவும் குளிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 50 சதவீதம் பேர், சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றனர். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் முக்கியமாக குளிர் மற்றும் பனி காலங்களில், சாதாரண அலர்ஜியான, சளி முதல் நிமோனியா காய்ச்சல் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு, இக்காலங்களில் அந்நோயின் தன்மை தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் அலர்ஜி என்பது ஒவ்வாமையாகும். இது ஒருவருக்கு பலவிதமாக வெளிப்படுகிறது. முக்கியமாக, இந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சுவாச குழாய் சம்பந்தமான பிரச்னை அதிகம் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று, தூசு ஆகியவற்றை சுவாசிக்கும்போது அவர்களுக்கு தும்மல், மூக்கில் நீர் வழிதல், கண்களில் அரிப்பு, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இது "அலர்ஜிக் ரைனைட்டிஸ்' என்றழைக்கப்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை தற்காலிகமாகவோ அல்லது நோயின் தன்மைக்கேற்ப தொடர்ச்சியாகவோ கொடுத்து, கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை மாத்திரைகள் மூலமோ அல்லது,"ஸ்பிரே' மருந்து வகையிலோ மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்” என்றும் தெரிவித்தார்.

தற்போது நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை பார்க்கலாமா?.

மாதுளைப் பழங்கள் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது.

ஆப்பிள்களில் வைட்டமின் ஈ, பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

கேரட் சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன.

பாதாம் மற்றும் முந்திரி உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுகளைத் தடுப்பதுடன், கொழுப்பு அமிலங்களைக் தடுக்கிறது. இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும். இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. புகைப்பிடிப்போர் உண்ண வேண்டிய ஒரு அருமையான பழம் இது. நுரையீரல் சுவாசம் நன்கு உள்ளிழுக்கும் திறனை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

 மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top