இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்தவர் தோனி (35 வயது). இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஐசிசி டி20 உலக கோப்பை (2007), ஆசிய கோப்பை (2010), ஒருநாள் போட்டி உலக கோப்பை (2011) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை (2013) வென்றுள்ளதுடன், டெஸ்ட் போட்டிகளிலும் நம்பர் 1 அணியாக முத்திரை பதித்தது.ஐசிசி சார்பில் நடத்தப்படும் 3 உலக சாம்பியன்ஷிப் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன், 40 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்த ஒரே கேப்டன் என்று பல்வேறு சாதனைகளை அவர் தன்வசப்படுத்தி உள்ளார். 2014ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக நீடித்து வந்தார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நேற்று அவர் திடீரென விலகினார். சாதாரண வீரராக அணியில் நீடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து 3 வகை போட்டிகளுக்கும் கேப்டனாக விராத் கோஹ்லி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கேப்டன் பதவியில் இருந்து விலகியது தோனியின் சரியான முடிவு என்று முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சவுரவ் கங்குலி கூறிஉள்ளார். மேலும் கேப்டன் பதவியில் இருந்து விலகியது தோனியின் சரியான முடிவு. தோனியால் வரும் 2019 உலக கோப்பை வரையில் சிறப்பாக விளையாட முடியும். தற்போதும் தோனி சிறப்பான ஆட்டக்காரராக உள்ளார். அவரை ஊக்குவிக்கலாம். குறிப்பாக அவரது ஒரு நாள் கிரிக்கெட் நம்மை பேச வைத்தது. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான கேப்டனாக விளங்கியுள்ளார். எதிர்காலம் மற்றும் இந்திய அணியின் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்'' என்று கங்குலி கூறி உள்ளார்.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர், தோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தோனியின் தலைமையில் பெற்ற வெற்றிகளை கொண்டாடும் தருணம் இது என்று கூறியுள்ளார். அதிரடி வீரராய் அணியில் நுழைந்து, கேப்டனாக மாறி நிலைத்து நின்று, மூன்று வித உலகக்கோப்பைகளை பெற்றுத் தந்ததை யாரும் மறக்க முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top