பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி. 66 வயதாகும் ஓம்புரிக்கு இன்று அதிகாலை திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டடு உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் கமல், அனுபம்கேர் மற்றும் மும்பை திரை உலகினர் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபிக்காரரான ஓம்புரி 1950-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்தார். இவரது தந்தை ரெயில்வே யிலும், ராணுவத்திலும் பணியாற்றினார்.புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த ஓம்புரி டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்றார். இவருடன் நடிப்பு பயிற்சி படித்த மாணவர்தான் நடிகர் நஸ்ருதீன்ஷா.

புனே திரைப்பட பயிற்சி பள்ளியில் படித்த 16 பட்டதாரிகள் கூட்டாக இயக்கிய காசிராம் கோத்வால் படத்தின் மூலம் ஓம்புரி சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தொடக்கத்தில் ஓம்புரி இந்தியில் தயாரான கலைப் படங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தயாரான படங்களிலும் நடித்தார். இந்தியில் ஓம்புரி, நஸ்ருதீன்ஷா, ஷபனா ஆஸ்மி, ஸ்மிதாபட்டேல் ஆகியோர் இணைந்து நடித்த கலைப்படங்கள் பின்னாளில் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

1982-ம் ஆண்டு சர்ரிச் சர்டு அட்டன்பரோ இயக்கி பரபரப்பாக ஓடிய காந்தி படத்தில் ‘நகாரி’ என்ற கதாபாத்திரத்தில் ஓம்புரி நடித்தார். தொடர்ந்து பல ஆங்கிலப் படங்களிலும், பஞ்சாபி, உருது, மராத்தி, மலையாளம், கன்னட மொழிப்படங்களிலும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 1982, 84-ம் ஆண்டுகளில் இருமுறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது, 1990-ல் பத்மஸ்ரீ விருது ஏராளமான பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top