இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடை பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் கான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுத்தது.அ ந்த ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தல் பந்து வீச்சு, நடுவரின் தவறான தீர்ப்பு ஆகியவற்றின் சாதகமாக 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற தொடர் 1-1 என சமநிலை வகித்தது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்தில் நேற்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய இந்திய அணி தமது 20 ஓவர்களில் 202 ரன்களை எடுத்தனர். அணியின் முன்னாள் தலைவர் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தோனி 56 ரன்களும் ரெயினா 63 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடவந்த யுவராஜ் சிங் சிறிது நேரமே நின்றாலும், இங்கிலாந்துக்கு ’தண்ணி’ காட்டி விட்டார். கிறிஸ் ஜோர்டானின் திடீரென வேகத்தை குறைத்து (ஸ்லோ) பந்து வீசும் தந்திரம் யுவராஜிடம் எடுபடவில்லை. அவரது ஒரே ஓவரில் யுவராஜ்சிங், 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்ட, மைதானமே ரசிகர்களின் உற்சாக கரவொலியில் அதிர்ந்தது. 18-வது ஓவரான அந்த ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 24 ரன்கள் கிட்டியது. யுவராஜ்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள் (10 பந்து) எடுத்தார்.

அடுத்து 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும், பின்னர் ஆடவந்த ஜோ ரூட் மற்றும் ஓவென் மார்கன் ஆகியோர் அணியை சிறிது தூக்கி நிறுத்தினர். எனினும் ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் மோர்கன் 40 ரன்களிலும் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 42 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற்றப்பட்டார். மேலும் தனது அடுத்த ஓவரில் சாஹல் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி முழுமையாக வீழ்ந்தது.இங்கிலாந்து அணியில் ஆறு பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்ட், 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் டி 20 அனைத்து தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது.

நேற்றைய பெங்களூரு ஆட்டத்தின் சிறந்த விளையாட்டு வீரராக தோனியும், ஆட்டநாயகனாக யஜுவேந்திர சஹாலும் அறிவிக்கப்பட்டனர்.இத்தொடரின் சிறந்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ராஹ்வும், தொடரின் நாயகனாக சஹாலும் தேர்தெடுக்கப்பட்டனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top