சர்வதேச அளவில் மரணத்தை உண்டாக்கும் முதல் மூன்று நோய்களில் இரண்டாம் இடம் பிடிப்பது பக்கவாதநோய். வாதம் என்றால் அது பக்கவாத நோயைத்தான் குறிப்பதாக மக்கள் கருதுகிறார்கள். இதனை பாரிசவாயு என்றும் குறிப்பிடுவர். பக்கவாதத்தை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக், அபாப்பிளக்சி என்று குறிப்பிடுவர். ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் பக்க வாத நோயினால் அதிகம் பாதிப்படைகின் றனர். ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்பவர்கள். பக்கவாத நோயினால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் பாதிப்படைந்தாலும் பக்கவாதத்தால் பாதிப் படையும் பெண்களில் 60சதம் பேர் மரண மடைகிறார்கள்.

பக்கவாதத்தில் எழுபத்தைந்து சதம் செயலிழப்பு ஏற்படுகிறது. தன்னுடைய செயலைத் தானே செய்து கொள்ள இயலாமல் போகிறது. இதனால் மனஅழுத்தம் அதிகமாகிறது. திரும்பவும் இயல்பான வாழ்க்கைக்கு வாதநோயினால் பாதித்தவர்கள் வருவதற்கு நீண்டநாட்கள் ஆகின்றது. வாதநோயினால் பாதித்தவர்களில் பத்து சதம் பேர் வலிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பக்கவாதம் அவசர மருத்துவத்திற்குரியது. 1658 இல் ஜோகன் ஜேகப் வெப்வெர், மூளையில் இரத்தக்கசிவினால் ஆக்சிசன் போதாமையால் செரிபரல் இன்பார்க்சன் ஏற்படுகிறது என்பதைத் தெளிவாக்கினார்.

இதனிடையே இன்றைய காலக்கட்டத்தில் ஒரே நிலையில் பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது கை, கால்கள் மரத்துப் போவது சாதாரணம். ஆனால், சில சமயங்களில் சிறிது நேரமே அமர்ந்திருந்தாலும், இந்நிலை ஏற்படுகிறது. ஒரு விதத்தில், இந்த அறிகுறி, மனிதனின் உடல் உபாதைகளை தெரிவிப்பதால், பக்கவாத நோயிலிருந்து முன்னரே விடுபடலாம்.நரம்பு செயல் பாடுகளில், குறையோ அல்லது இழப்போ ஏற்படும் போது, கை, கால்கள் மரத்துப் போகின்றன. இது போன்ற நரம்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை, "நியூரோபதி' என, அழைப்பர். மரத்துப் போன நிலை ஏற்பட்டால், உடனே கழுத்துப் பகுதியில் கோளாறு இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.

கழுத்தில் பிசகு இருக்குமானால் அது, கை, கால்களுக்கு செல்லும் நரம்புகளை அழுத்தி கை, கால் மரத்துப் போகும் நிலையை உருவாக்கும். அத்துடன் நீரிழிவு நோய்க்கும் இது அறிகுறியாக செயல்படுகிறது. நீரிழிவு சுலபமாக உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும். வெறும் மரத்துப் போவதோடு கை கால் குத்தல், எரிச்சல், தரையில் நடப்பதை உணரவே முடியாது என நரம்பின் செயல்பாட்டை குறைக்கும்.பக்கவாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறியும் இந்த மரத்துப் போகும் தன்மை தான்.

ஆனாலும் ஆரம்பத்தில், குறிப்பிட்ட ஒரு பக்கமே மரத்து போவது அல்லது பலவீனமாக இருக்கும் நிலை உண்டாகும். பின், ஒரு சில நாட்கள் கை, கால்கள் சோர்ந்த நிலை ஏற்படும். உடனடியாக, மருத்துவமனைக்கு சென்று, நரம்பியல் தொடர்பான ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., கழுத்தின் ரத்த குழாய் பரிசோதனை செய்வதால், பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம்."மெனோபாஸ்' நிலையில் இருக்கும் பெண்களுக்கு, இயல்பாகவே மரத்துப் போகும் தன்மை இருப்பதால், நரம்பு தொடர்பான பிரச்சனைக்கும், இதற்கும் தொடர்பில்லை என்பதால், மனஉளைச்சல் தேவையில்லை என்பதை புரிந்து அறிந்து செயல்பட வேண்டியது அவசியமாக்கும்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top