இப்போதெல்லாம் வீடோ, ஆபீஸோ- பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீரை தான் பயன்படுத்துதான் நாகரிகம் என்று நம்ப வேறு செய்கிறார்கள். அதிலும் தற்போது வழக்கம் போல் போன ஆண்டை விட சூடான கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் உபயோகிப்பது குளிர்ந்த நீரை தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் டாக்டர்கள்.

அதாவது ‘ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உளவியல் ரீதியாக ஒரு விடுபடல் கிடைக்கிறது. தாகம் சீக்கிரம் அடங்கி விடும். வெப்பமான சூழலில் குளிர்ச்சி யான தண்ணீரைக் குடிக்கும்போது உடலும் குளிர்ச்சியாகும் என்கிற ஒரு உணர்வு மட்டும்தான் நமக்குக் கிடைக்கும். மற்றபடி அது உடலைக் குளிர்ச்சியாக்குவதில்லை. அதே நேரம் , ஃப்ரிட்ஜிலிருந்து வெளிப்படும் வாயு சூழலுக்கு விரோதமானது. ஆஸ்துமா போன்ற தொந்தரவுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் குளிரூட்டப்பட்ட தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்கலாம்.

அதிலும் இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மற்றோரு குரூப் டாக்டர்கள். நாம் உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்' என்றும் அந்த மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் !..மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top