ஆண்டு தோறும் ஏப்ரல் 7ம் நாள் உலக சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 1950ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், தொற்று நோய்கள் என, பல கருப்பொருள்களை முன்வைத்து, உலகளவில் மக்களுக்கு தேவைப்படும் விழிப்புணர்வு, மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வழிமுறைகள், பொருளாதார உதவி என, பலவற்றுக்கு உலக சுகாதார மையம் உதவி வருகிறது. ஆனால் மற்ற நோய்களை காட்டிலும் மனச்சோர்வு நமக்கு தெரியாமலேயே, உயிரை கொன்றுவிடும். கை, கால், உடலில் எந்தப் பகுதி சரியில்லை என்றாலும், மன திடத்தால் அவற்றை குணமாக்கவோ, தேற்றியோ வாழ முடியும். ஆனால் மனம் சரியில்லை என்றால் அதுவே பல நோய்களுக்கு வேராக அமையும் என்று மனநல மருத்துவர்கள் கூறுவதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ‘மன அழுத்தம் நாம் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது.

ஆம்.. இந்த 21ம் நூற்றாண்டின் முக்கிய நோயாக மனஅழுத்தம் இருக்கும் என பல ஆய்வுகள் முன்னரே எச்சரிக்கை தெரிவித்திருந்தன. இப்போது எல்லாம் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாக மன அழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகும் என்றாலும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிப்ரஷன் எனப்படும் இந்த மன அழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும்,நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம். குறிப்பாக இன்று 5 முதல் 20 வயதில் உள்ளவர்கள் அதிகமனஅழுத்தத்தில் அவதிப்படுகின்றனர்.

உலகில் உள்ள மக்கள் தொகையில் 69% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

76% பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர்.

77% பேர் குடும்ப உறவுகளினால் மன அழுத்திற்கும், மனோபயத்திற்கும் ஆளாகியுள்ளனர் .

50% பேர்களுக்கு புதிய பொருள்களை நுகர முடியவில்லை என்பதே பெரிய கவலையாக உள்ளது .

55% பேர்களுக்கு குறைந்த நண்பர்களே உள்ளனர்.

58% பேர்கள் தலைவலியால் அவதிபடுகின்றனர்.

70% பேர் உடனே கோபப்படுபவர்களாக உள்ளனர்.

அதிகமான மன அழுத்தம் ஓரு நபரின் உயிரியல் வயதை 30வருடங்கள் கூட்டுகிறது என்றும், சமிபத்திய ஆய்வு கூறுகிறது.

அதுமட்டுமல்லாது மனஅழுத்தம் அதிகமாகி தற்கொலை நிகழ்வுகளும் அதிகரிக்கும் அளவுக்கு இந்நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.கடந்த 2004 – 2008 மட்டும் 16000மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.அதேபோல்2006ல் மட்டும் 5857 மாணவர்கள் தேர்வு பயத்தால் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்தசமூகத்தின்செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்றுநம்முடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகளினால் வருவது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் உண்டாகிறது.

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

தவறான பழக்கங்களின் மூலம் உண்டாகும் மனஅழுத்தம்?

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

மனஅழுத்தால் உண்டாகும் நோய்கள்என்ன?

மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாகமைகிரேன்எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமாஉட்பட பல நோய்களைமன அழுத்தம் கொண்டு வருகிறது. தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை,தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு,உயர் இரத்த அழுத்தம், உடல் எடைஅதிகரித்தல், குறைதல்,ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக்குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய்,

குழந்தைகளிடம் மன அழுத்தம் அற்ற நிலையை உருவாக்க

குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒருஆய்வு கூறுகிறது. அதாவது பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, கவனிப்பின்மை போன்றகாரணங்களால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.அன்புக்கு ஏங்குகின்றன. இதுவே, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. துõக்கமின்மை, உணவில்ஆர்வமின்மை, சோம்பல்போன்றவை ஏற்பட்டால், உடனே குழந்தைகளைடாக்டரிடம்காட்ட வேண்டும்.தாழ்வு மனப்பான் மைக்கு, சிகிச்சைஅளிக்கவேண்டும். நாளடைவில் இது குறைந்து விடுகிறது. ஏழுவயதில் இருந்து பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில்அதிகம் பாதிக்கப்படுவதாக டில்லியில்நடந்த ஓர் ஆய்வில்தகவல் வெளியாகியுள்ளது

தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடையதினம் எப்படிசெலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தனஎன்றெல்லாம்உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பதுபோல உணர்ந்தால் அதிலிருந்துஎப்படி விடுபடுவது என்பதைஅவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம்கொண்டும்திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவைமற்றும் அமைதியானவாழ்க்கையின் அவசியத்தைவலியுறுத்துங்கள்.

குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப்பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்லமறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம்போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையைவளர்க்கமுயலுங்கள். அது இறுக்கமான சூழல்களைகுழந்தைகள் சமாளிக்கபிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும்எனஎதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தைஉருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவதுநடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மனஅழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள்.தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக்கொண்டிருங்கள் அல்லதுஎதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும்வாய்ப்புஉண்டு.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தைகுடிக்கக் கூடாது எனஅறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம்செலவிடுவதும்,அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள்,உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மனஅழுத்தத்தைக் குறைக்கும்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top