இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமைக் கொண்டாடுகிறது. ஆனால், இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா, சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தலாய்லாமாவை அருணாச்சல பிரதேசத்திற்கு வர இந்தியா அனுமதிக்கக்கூடாது என எச்சரித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமாவை வரவேற்றது.

இதனால் எரிச்சலடைந்த சீனா, இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6 பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சூட்டி, சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மீதான உரிமையை நிலைநிறுத்தவும் அவை தனக்குச் சொந்தமானவை என பிரகடனப்படுத்தவும் சீனா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, சீன மற்றும் ரோமானிய எழுத்துகளை கலந்து, வோ’ கியான்லிங், மிலா ரி, கியூடென்கார்போ ரி, மெயின்குவாக்கா, புமோ லா மற்றும் நாம்கபுப் ரி ஆகிய 6 பெயர்களை சீனா சூட்டியுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, தெற்கு திபெத் என அழைக்கப்படும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top