எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் ஆகியோரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ வரும் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி தொடர்பாக தமிழகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதை கையில் எடுத்துள்ள கன்னட அமைப்புகள், சத்யராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை எனில் அவர் நடித்திருக்கும் ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம், என்று கூறி வருகின்றனர்.

இதையடுத்து இயக்குநர் ராஜமெளலி கர்நாடகா சென்று கன்னட அமைப்புகளிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்திய போதிலும், சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று கூறிவருகிறார்கள்.இந்த நிலையில், ‘பாகுபலி-2’ படத்திற்கு எதிராக 28 ஆம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி, படத்தை திரையிட முடியாதவாறு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

சத்யராஜ் பேச்சுக்குப் பிறகு அவர் நடித்த பல படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. ஏன், பாகுபலியின் முதல் பாகம் கூட கடந்த ஆண்டு அங்கே வெளியான நிலையில், தற்போது ‘பாகுபலி-2’ படத்திற்கு சத்யராஜை வைத்து பிரச்சினை செய்வது சரியானது அல்ல, என்று இயக்குநர் ராஜமெளலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இச்சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜமெளலி. அப்பதிவில், " பல வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் சார் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியுள்ளன. 'பாகுபலி' வெளியாகும் போது இப்பிரச்சினையில்லை. இப்படத்தில் அவர் ஒரு நடிகர் மட்டுமே. தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல. உங்களுடைய எதிர்ப்பை நான் சத்யராஜ் அவர்களிடம் விளக்கிவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. சத்யராஜ் மீதுள்ள கோபத்தை 'பாகுபலி ‌2' திரைப்படத்தின் மீது காட்டுவது சரியல்ல. 'பாகுபலி' படத்துக்கு கிடைத்த அதே ஒத்துழைப்பை, 'பாகுபலி 2' படத்துக்கும் தர வேண்டும் " என்று கேட்டுகொண்டுள்ளார் ராஜமெளலி.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top