சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தின் எல்லையில் மிக பெரிய உல்லாச நகரம் அமைக்கபடவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டு உருவாகவிருக்கும் பொழுதுபோக்கு நகரம் கலாசாரம், விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கான ஓர் இடமாக அமையும் என சவுதி துணை இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்த உல்லாச நகரத்தின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டில் நிறைவடையும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. இந்த நகரம் பார்வையாளர்களை மட்டும் ஈர்க்காமல், தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும் என தெரிகிறது. எண்ணெய் வருமானத்தை மட்டுமே சார்ந்திருப்பதை குறைப்பதற்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குகளை கொண்ட விஷன் 2030 ஆகியவைகளுக்கு ஒரு பகுதியாக சவுதி அரசு இதை நிறைவேற்றவுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் 2030-க்கான பொருளாதார சீர்திருத்த சட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் சவுதியில் சிறு, குறு தொழிலில் 15 லட்சம் பேர் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இந்த 15 லட்சம் மக்களில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே சவுதியை சேர்ந்தவர்கள் என்பதும் மற்றவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற தகவலும் சவுதி அரசுக்கு தெரியவந்துள்ளது. அதாவது சவுதி நாட்டில் நடை பெறும் சிறு தொழில்களில் 5-ல் ஒருவர் மட்டுமே சவுதி நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார். மற்றவர்கள வெளிநாட்டவர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சவுதி அரேபியாவின் தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில், அங்குள்ள ஷாப்பிங் மால்களில் இனி அந்நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் பல வெளிநாட்டவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என தெரிகிறது. அதனால் இந்தியா கடுமையான பதிப்புக்கு ஆளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா வரிசையில் இப்பொழுது சவுதி அரேபியாவும் பெரும் நெருக்கடியாக தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top