வர்த்தக நிறுவனங்களிலும் சரி.. தனி நபராக இருந்தாலும் சரி.. 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பணபரிவர்த்தனை செய்துகொள்ளக்கூடாது மீறி பணம் கைமாறினால் அதே தொகை அபராதமாக கட்ட வேண்டி வரும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆனது. அதை மீண்டும் மக்களிடையே நினைவுப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூபாய் 1000,500 நோட்டுகளுக்கு தடை விதித்தது. அது மட்டுமின்றி ரொக்க பண பரிமாற்றமே இருக்கக்கூடாது... டிஜிட்டல் முறையிலேயே பண பரிவர்த்தனைகள் நடக்கவேண்டும் என்று கூறி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ரூ.3லட்சம் வரையிலான ரொக்க பரிமாற்றத்துக்கே தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தான் இந்த வரம்பு ரூ.2லட்சமாக குறைக்கப்பட்டது. ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரொக்க பண பரிவர்த்தனையே இருக்கக்கூடாது என்று கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு தடை விதித்தது.

இந்த நிலையில்,வருமானவரித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரே நாளில் 2லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ரொக்கமாக யாரும் பணபரிவர்த்தனை செய்யக்கூடாது. ஒரே பரிவர்த்தனையாக இருந்தாலும் ஒரேநாளில் பல பரிவர்த்தனையாக இருந்தாலும், ஒரே நபரிடம் இருந்து ரூ.2 லட்சம் அதற்கு மேல் பெற்றாலும் 100சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.

அதாவது எவ்வளவு தொகை பரிமாற்றம் நடந்ததோ அதே தொகை அபராதமாக வசூலிக்கப்படும். இதற்காக வருமான வரி சட்டத்தில் புதிதாக 269எஸ்டி என்ற புதிய ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடு அரசு, வங்கிகள், அஞ்சலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top