அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி டைரக்‌ஷனில் சந்தானம் நடிக்கும் படம் 'சர்வர் சுந்தரம்'. இதில் சந்தானம் கேட்டரிங் மாணவனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி அறிமுக நாயகி வைபவி சாண்டில்யா.

இப்படம் குறித்துடைரக்டர் ஆனந்த பால்கி, “1964 ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'சர்வர் சுந்தரம்'. இப்படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு எவர் க்ரீன் படமாக இன்று வரை உள்ளது. அதே படத் தலைப்பில் இன்று சந்தானம் நடிக்கிறார். மறைந்த நாகேஷிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நாகேஷ் பேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வர்மா, படத்தொகுப்பு தினேஷ் பொன்ராஜ்.

இந்தப் படம் சந்தானம் கேரியரிலேயே மிகப்பெரிய படமாக அமைந்திருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் குறைந்த காலத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கது. டரைலரை பார்த்த ரசிகர்கள் பிரமாண்டமான காட்சியமைப்புகள், கலர்ஃபுல்லான விஷூவல் மற்றும் சந்தானத்தின் மாறுபட்ட தோற்றத்தை வெகுவாக பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறோம், ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புகிறேன். பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும் இந்த சர்வர் சுந்தரம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மொழி எல்லைகளை கடந்து சந்தானத்தின் மார்க்கெட் விரிவடைந்திருப்பதையே இது காட்டுகிறது" என மகிழ்ச்சியோடு கூறினார் இயக்குனர் பால்கி.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top