இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. கிரையோ ஜெனிக் தொழில் நுட்பத்தில் செயல்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 3,136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் இந்த வரலாற்று சாதனையை பல்வேறு தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து இஸ்ரோ வட்டாரம் தெரிவிக்கையில், ”உள் நாட்டிலேயே அதாவது நம் இந்தியாவிலேயே தயாரித்துள்ள மிகப் பெரிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டான இது கிரையோ ஜெனிக் தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. 640 டன் எடை கொண்டது. ஆனால் உயரம் மிக சிறியது. அதாவது 43 மீட்டர் உயரம் கொண்டது. இது 200 யானைகளின் எடைக்கு சமமானது. இந்த ராக்கெட் 8 டன் எடையை சுமந்து செல்ல முடியும். அதனால் இதன் மூலம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்ல முடியும்.

அதற்கு வசதியாக இந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பூமிக்கு பத்திரமாக அழைத்து வரும் வகையில் 3 ஆயிரத்து 775 கிலோ எடை கொண்ட கப் வடிவிலான அறை போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 7-வது முறையாக இன்று மாலை 5.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

அதற்கான 25½ மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 3.28 மணிக்கு தொடங்கியது. கவுன்ட்டவுன் முடிந்த நிலையில், சரியாக இன்று மாலை 5.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. அது திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ராக்கெட் ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. முன்னரே சொன்னது போல் இந்த செயற்கை கோள் 3,136 கிலோ எடை கொண்டது. இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளை விட மிக அதிக எடை கொண்டது. அதாவது ஒரு யானை எடை கொண்டது.

அதி நவீன வசதிகளுடன் ஆன தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்களை கொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும்.

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படும். அதில் 4,500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன் டெனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் மார்க் 3 ராக்கெட் தான் முதன் முறையாக அதிக எடையுள்ள செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்ல உள்ளது” என்று தெரிவித்தனர். 

இதையடுத்து “ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை ஏவி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக நாடு பெருமிதம் கொள்கிறது’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, ஜி.சார்-19 திட்டத்தின்மூலம் இந்தியா அடுத்த தலைமுறை செலுத்து வாகனம் மற்றும் செயற்கைக்கோள் திறனை நெருங்கி உள்ளது. இதனால் நாடு பெருமை கொள்கிறது. இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top