நம் நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில் இங்குள்ள ஆளும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. வழக்கம் போல ஆளும் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து அதற்கான அல்லொசனையில் ஈடுப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14-ம் தேதி துவங்கும் என அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 28-ம் தேதி கடைசி நாள் என்றும். அதற்கு அடுத்த நாள் மனுக்கள் மீதான பரிசீலனையும். மனுக்களை திரும்ப பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 20-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்

மேலும் தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன விஷயங்களின் ஹை லைட் இது:

*ஜூலை 24 ஆம் தேதியோடு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைகிறது.
*காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
* அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
* வாக்களிக்க தகுதியுள்ள 50 பேர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும்.
* நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும்.
* அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றால், 10 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
* இந்தத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள்.
* இத்தேர்தலில் கொறடா உத்தரவு மக்கள் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தாது



மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்



© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top