பிரபல இயக்குநர், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி நடிக்கும் படத்துக்கு 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இன்பசேகர் இப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த பயணமே 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் கதை.

ரேஷ்மா ரத்தோர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வகையில் அட்டகாசமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். பாடல் வரிகளை செதுக்கியிருக்கிறார் யுகபாரதி. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் குறிப்பாக ‘ஏன்டி நீ என்னை இப்படி’ என்கிற பாடல் இணையத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேலான ரசிகர்களால் ரசிக்கப்பட்டும், நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாடி பதிவேற்றப்பட்டும் வருகிறது.

இப்படத்திற்கு ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர். சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா வரும் நாளை 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த டிரைலர் மற்றும் பாடல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இப்படத்தை இம்மாதம் 16-ம் தேதி வெளியிடவுள்ளனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top