மலேசியாவில் இருந்து திரும்பி அனுப்பப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை வந்து சேர்ந்தார். அப்போது அவர், இலங்கையில் இருந்து வந்துள்ளீர்களா? விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று மலேசியா போலீசார் என்னை கேட்டார்கள். மேலும் என் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் மலேசியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்து விட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேலும் மலேசியாவில் என்னை ஒரு கைதி போல நடத்தினர். உணவுக் கூடத்துக்கு கூட செல்ல அனுமதிக்கவில்லை. காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். நேற்று இரவு சென்னையில் சாப்பிட்டதுதான் இதுவரை சாப்பிடவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

இதே போல் ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தனக்கு விசா மறுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய வைகோ, இந்த நிகழ்வுக்காக மலேசியாவில் இருக்கும் இந்திய தூதர் திருமூர்த்தி மிகவும் வருத்தப்பட்டதாக கூறினார். மேலும் ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு தன்னை இவ்வாறு பிற நாடுகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வருவதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வராக உள்ள பேராசிரியர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நள்ளிரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார். ஆனால் நேற்று (9) காலை கோலாலம்பூர் விமான நிலையம் சென்றடைந்த வைகோவை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.மலேசியா நாட்டுக்கான ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக கூறி தடுத்து வைத்துள்ளனர். சென்னைக்கு திருப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளனர். மலேசிய அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top