’எய்தவன்’ படத்திற்கு பிறகு 'மெட்ராஸ்' புகழ் கலையரசன் நடித்த விக்கி ஆனந்தின் ‘உரு’ ரிலீஸுக்கு ரெடியாகவுள்ளது. இது தவிர கலையரசன் கைவசம் எம்.நாகராஜின் 'காலக்கூத்து’, ஹர்ஷவர்தனாவின் ‘சைனா’,ஜெயதேவ்வின் ‘பட்டினப்பாக்கம்', முரளி கார்த்திக்கின் ‘களவு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதனிடையே ‘உரு’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக தன்ஷிகா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மைம் கோபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜோகன் இசையமைத்துள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாய் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துள்ளார். சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித்தும், ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், டிரையிலரை படக்குழுவினரும் ட்விட்டினார்கள்.

இந்த போஸ்டர்ஸ், டீசர் & டிரையிலர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்ததோடு, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாம். இதை தயாரிப்பாளர் வி.பி.விஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு எங்கள் உரு திரைப்படத்திற்கு திரைப்பட தனிக்கை குழு U/A சான்றிதல் பெற்றுவிட்டோம். இந்த போராட்ட நேரத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி” என ஸ்டேட்டஸ் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘உரு’ டீம்.

இதனிடையே இந்த படத்தை இய்க்கி அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் (இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்) இந்த படம் குறித்து, “‘உரு’சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இது, பேய் படங்கள் அதிகம் பார்த்த ரசிகர்களுக்கு உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய இந்த படம் புதுசா இருக்கும்! இந்த படத்தை முழுக்க கொடைக்கானலில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம். அது சவாலான விஷயமாக இருந்தது. கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி என இப்படத்தில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் என எல்லோரும் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டம் எல்லாம் மறந்து போகும் விதமாக ‘உரு’ நல்ல ஒரு படமாக வந்துள்ளது’’ என்றார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top