நம் நாட்டைப்பொறுத்த வரை சர்வதேச சந்தை விலைக்கேற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அன்றாட விலைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகிறது. எனவே இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை அடிப்படையில், கடந்த மே 1 ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த முறையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகளை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைத்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, வருகிற 16ம் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு அகில இந்திய பெட்ரோல் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசின் தினசரி விலை நிர்ணயம் தொடர்பாக ஆலோசித்த அவர்கள், இந்த முடிவை ஏற்க முடியாது என்று அறிவித்தனர். இதையடுத்து வருகிற 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முடிவை செயல்படுத்த வேண்டாம் என்று எங்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இதை சுட்டிக் காட்டும் வகையில் வருகிற 16ம் தேதி பெட்ரோல் பங்க்களில் எந்த விற்பனையும் கிடையாது. பெட்ரோல் வாங்குவதும் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமையான முடிவை கைவிடுவது பற்றி சாதகமான பதில் கிடைக்காவிட்டால், வருகிற 24ம் தேதியில் இருந்து பெட்ரோல் பங்க் செயல்படாது. நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடக்கும். அரசின் முடிவு ரத்து செய்யப்படும் வரை பெட்ரோல், டீசல் விற்க மாட்டோம்... வாங்கவும் மாட்டோம் என்று அந்த சங்கத்தின் தலைவர் அசோக் பத்வார் அறிவித்துள்ளார்.

இது குறித்து பெட்ரோலிய அமைச்சகத் துக்கு கூட்டமைப்பின் சார்பில் ஒரு கடிதம் எழுதப் பட்டுள்ளது. தினமும் விலை நிர்ணயிப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் தான் பயன் அடையும். சில்லரை விற்பனையில் ஈடுபடும் பெட்ரோல் விற்பனையாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். முற்றிலும் அவர்கள் அழிந்தே போவார்கள். தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டால், ஒவ்வொரு நாள் இரவும் பெட்ரோல் விற்பனையாளரே பங்க்கில் இருந்து விலையை அறிந்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய விலையை நள்ளிரவு 12 மணி தாண்டித்தான் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். எனவே விடிய விடியபெட்ரோல் வர்த்தகர்கள் காத்துக் கிடந்து அந்த விலையை அறிந்தே விற்க அறிவுறுத்த வேண்டும். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது. தினமும் வர்த்தகர்கள் கண் விழிப்பதால் உடல்நிலை தான் பாதிக்கப்படும். எண்ணெய் நிறுவனங்களில் நெட் வொர்க் முழுவதும் தானியங்கியாக மாற்றப்படவில்லை.

மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ரிமோட் ஆபரேஷன்களும் சாத்தியம் இல்லை. இந்த ஆனால் எங்கள் வாழ்க்கை ஆதாரமே அழிக்கப்படும்போது இதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே எண்ணெய் நிறுவனங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தலையிடவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பெட்ரோல் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top