தமிழகத்தில் அக்னி முடிந்த நிலையிலும் ஒருவார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பல நகரங்களிலும் வெயில் தாக்கம் தகிக்க துவங்கியுள்ளது. நேற்று அதிகபட்சமாக மதுரையில் 104.2 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருத்தணியில் 104, திருச்சி, சென்னை மீனம்பாக்கத்தில் தலா 102, சென்னை நுங்கம்பாக்கம், துாத்துக்குடி, கடலுாரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலோர மாவட்டங்களில் அனல் காற்று தாக்கமும் நிலவியது. அதேநேரம் கோவை, நீலகிரி உட்பட பகுதிகளில் மிதமழை பெய்தது.

நம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் கூட, இன்னும் பெரிய அளவில் பயனில்லை. தமிழகத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை இயல்பாக 32 செ.மீ. பெய்ய வேண்டும். அதன்படி, ஜூன் மாதம் 5 செ.மீ, ஜூலை 7 செ.மீ, ஆகஸ்ட் 8 செ.மீ, செப்டம்பர் 11 செ.மீ மழை பெய்ய வேண்டும். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் ஓரளவுக்கு வறட்சியில் இருந்து மீள முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது, மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக வால்பாறையில் 18.2 மி.மீ, தர்மபுரியில் 5 மி.மீ, உதகமண்டலத்தில் 3.4 மி.மீ, கோவையில் 1.2 மி.மீ மழை பதிவானது. இந்த நிலையில், அடுத்த வாரம் முதல் பருவமழையால் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ள வறண்ட வானிலை சில நாட்களுக்கு தொடரும். அடுத்த 2 நாட்கள், சில இடங்களில் மிதமழை பெய்யும். கடலோரத்தில் வறண்ட காற்று தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வெயில் தாக்கமும் பரவலாக காணப்படும். மாத இறுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top