நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. பார்லியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தொடரந்து பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களையும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே ஜி.எஸ்.டி., அமலாகும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தி என தெரிவித்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சரக்கு மற்றும் சேவை வரி திட்டமிட்டபடி ஜூலை 1, 2017 அமலுக்கு வரும். கடைசி வணிகரையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்சிகளை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் நடத்தும். ஜி.எஸ்.டி-யின் கட்டமைவு குறித்து விரைவில் வெளியிடப்படும்.

மீதமுள்ள வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி முனையம் முறை மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. ஜூலை 1, 2017 சரக்கு மற்றும் சேவை வரியை சுமுகமாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top