பெட்ரோல் டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் வழக்கம் இன்று முதல் அமலுக்கு வந்து விட்டது.அதன்படி நள்ளிரவுக்குப் பதிலாக காலை 6 மணிக்கு விலை மாற்றங்கள் அமலுக்கு வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஜூன் 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தினமும் நள்ளிரவு 12 மணிக்கு இந்த விலை மாற்றம் நிகழும் என்றும் அறிவித்தது. உடனே விலை நிர்ணய நேரம் நள்ளிரவு 12 மணியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டதற்கு, பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நேரத்தை, காலை 6 மணிக்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அது அறிவித்திருந்தது. இதையடுத்து, அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்புடன், அத்துறையின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணய நேரம் தினமும் காலை 6 மணிக்கு இருக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த நடைமுறை, ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து, நடத்த இருந்த வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்களின் கூட்டமைப்புத் தலைவர் அஷோக் பத்வார் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விலை விவரங்களை பெட்ரோல் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புதிதாக செயலியை (ஆப்) இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது மாதம்தோறும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யும் புதிய திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவிலும் இவற்றின் விலை தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், சண்டீகர், ஜாம்ஷெட்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் கடந்த 40 நாட்களாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியையடுத்து வரும் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அடுத்த நாளுக்கான விலை குறித்த விவரம் டீலர்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்காக Fuel@IOC என்ற செயலி (ஆப்) ஒன்று உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அவர்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை அறிந்து கொள்ளலாம். இதைத் தவிர, மின்னஞ்சல் (இமெயில்), குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்), இணையதளம் ஆகியவற்றின் மூலமும் தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், தானியங்கி வசதி கொண்ட பெட்ரோல் பங்குகளில் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படும். பொதுமக்கள் இந்த தினசரி விலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள 92249-92249 என்ற மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பினால் அவர்களது மொபைல் எண்ணுக்கு விலை விவரம் அனுப்பி வைக்கப்படும். இதைத் தவிர, ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் மின்னணு தகவல் பலகை மூலமும் விலை விவரம் குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top