கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை கொச்சியில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.ரூ.5,181 கோடி மதிப்பில், 13 கி.மீ. தூரத்துக்கான இந்த மெட்ரோ ரயில் சேவை நாட்டின் 8-வது மெட்ரோ ரயில் சேவை என்பதும் இதன் ஒட்டுமொத்த மின் தேவையில் கால் பங்கு மின்சாரம் சூரிய சக்தி (சோலார்) மூலம் பெறும் வகையில் 23 நிலையங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 2.3 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இது தவிர 4 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி மையத்தை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.மெட்ரோ சேவையைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி பலரிவட்டம் பகுதியில் இருந்து பத்தடிபாலம் வரையில் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அவருடன் கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் பயணம் செய்தனர்.

பின்னர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நகரில் கல்வியாளர் பி.ஆர். பானிக்கர் அறக்கட்டளை சார்பாக ஒரு மாத கால படிப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசினார். அப்போது மோடி, “அறிவானது எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல. சமுதாயத்தில் பெரும் மாற்றத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும். நல்ல சமுதாயம் அமைவதற்கு நல்ல படிப்பறிவு அடித்தளமாக அமைகிறது. டிஜிட்டல் கல்வியறிவு மிகவும் முக்கியமானது. பானிக்கர் அறக்கட்டளையானது தற்போது டிஜிட்டல் கல்வியறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குறியது. இந்த நேரத்தில் டிஜிட்டல் கல்வியறிவானது மிகவும் முக்கியமானதாகும். டிஜிட்டல் கல்வியறிவு சமுதாய இயக்கமாக மாறும் என்று நம்புகிறேன்.

இந்தமாதிரியான இயக்கமானது பெரிய அளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் அதிக அளவில் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்க தூண்ட வேண்டும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். அதிகம் படிப்பது பெரும் மகிழ்ச்சியை தரும். அதனால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். அறிவைக்காட்டிலும் நல்ல நண்பர்கள் இல்லை. இளைஞர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதோடு நல்ல தேசத்தையும் உருவாக்க முடியும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை மீண்டும் ஞானம் மற்றும் அறிவுப்பூர்வ நாடாக மாற்றுவோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதனிடையே மெட்ரோ ரயிலின் தொடக்க விழா இன்று நடந்தாலும் நாளை மறுநாள் முதலே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிறுவனத்தில் முதல் முறையாக திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்க, துப்புரவு பணி செய்ய என முதல் கட்டமாக 23 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.திருப்புணித்துறா வரை மெட்ரோ ரயில் ஓடும்போது 60 திருநங்கைகள் பணியில் இருப்பார்கள் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top