அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 61வது படத்தின் டைட்டில் ‘மெர்சல்’ என்றும் ஜல்லிக்கட்டு வீரன் போஸ் உடனான முதல் பார்வை போஸ்டரும் நேற்று வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்த விஷயம்தான்.இந்த நிலையில் இதே படத்தில் இன்னொரு கேரக்டரான மேஜிக்மேன் கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் தோற்றம் கொண்ட போஸ்டர் ஒன்றும் நேற்று இரவு வெளியாகியுள்ளது. சிகப்பு கலரில் அட்டகாசமாகவுள்ள இந்த போஸ்டர் இன்று விஜய் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பி.எச்.டி மாணவர்கள் போல் விஜய் ரசிகர்கள் ரிசர்ச் செய்து தங்கள் கண்டு பிடிப்பை வெளிப்படுத்தி வருவதுதான் ஹைலைட். . அதாவது மெர்சல் என்ற தலைப்பின் எழுத்துக்கள் மாட்டின் கொம்பு மற்றும் வால்போல் உள்ளது என்றும், இளையதளபதி என்பது தளபதி ஆக புரமோஷன் பெற்றதையும் கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கண்டுபிடிப்பாக இந்த படத்தின் டைட்டிலை தலைகீழாக வைத்து பார்த்தால் அதில் ‘விஜய்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் VIJAY என்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் விஜய், மற்றும் அட்லி யோசித்தார்களா என்று தெரியவில்லை.

மேலும் #Mersal என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டாப் 10 ட்ரெண்டிங்கில் தொடர்ந்து சில மணி நேரங்கள் சாதனை செய்ததோடு விஜய்யின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டியும், விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தும் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தான் தாமதம் அதுக்குள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள ரசிகர்கள் பேனர், பிளக்ஸ் என்று அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top