பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த 2014 டிசம்பரில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக உலக சாதனை நிகழ்வாக குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் யோகா குரு ராம்தேவ் தலைமையில் ஒரே இடத்தில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ஆசனங்களைச் செய்தனர். சுமார் 1 மணி நேரம் முதல் 1.30 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆசனங்களை யோகா குரு ராம்தேவ் மேடையில் இருந்தபடி செய்து காட்டினார். அதனை மைதானத்தில் திரண்டிருந்த குழந்தைகள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்தார்

இதனிடையே “சர்வதேச யோகா தினத்தில் தாத்தா - பாட்டி, பெற்றோர், குழந்தைகள் என மூன்று தலைமுறையினர் யோகாசனம் செய்யும் படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று மோடி தன் ரேடியோ உரை மூலம் கேட்டுக் கொண்டார்.பிரதமரின் அழைப்பை ஏற்று, சர்வதேச யோகா தினத்தில் நாடு முழுவதும் ஏராளமான குடும்பத்தினர், 3 தலைமுறையினர் யோகாசனம் செய்யும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

சில குடும்பத்தினர் நான்கு தலைமுறையினர் யோகாசனம் செய்யும் படங்களையும் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக 3 தலைமுறையினரின் யோகாசன புகைப்படங்கள், வீடியோக்கள் குவிந்து வருவது குரிப்பிடத்தக்கது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top