எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முழுவதும்சிறப்பாக நடத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான குழு மற்றும் நூற்றாண்டு விழா மலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினை வெளியிட மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பெற்றுக் கொண்டார். மேலும், நூற்றாண்டு விழாவிளம்பர குறுந்தகட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடவனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை மிகப் பிரமாண்டமாக கொண்டாடுவது குறித்தும் வரும் 30 ம்தேதி மதுரையில் தொடக்க விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில அளவிலான விழாக் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள், அரசுத்துறை மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாளை ஜூன் 30 ம்தேதி முதல் ஜனவரி 2018 வரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்கவிழாவும் நாளை மதுரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் மதுரையை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது.

அதன் விவரம் இதோ:

ஜூலை 22ம்தேதி -திருப்பூர், ஜூலை - 29 ம்தேதி திருவண்ணாமலை, ஆகஸ்ட் 5 ம்தேதி -பெரம்பலூர், ஆகஸ்ட் 9 ம்தேதி விழுப்புரம், ஆகஸ்ட் 16 ம்தேதி கடலூர், 30 ம்தேதி காஞ்சிபுரம், செப்டம்பர் 2 ம்தசேதி திருவள்ளூர், செப்டம்பர் 6 ஈரோடு, செப்டம்பர் 9 ம்தேதி வேலூர், செபடம்பர் 9 ம்தேதி வேலூர், செப்டம்பர் 11 ம்தேதி நீலகிரி, செப்டம்பர் 2 ம்தேதி சேலம், செப்டம்பர் 23 ம்தேதி கிருஷ்ணகிரி, செப்டம்பர் 30 ம்தேதி நாமக்கல், அக்டோபர் 4 ம்தேதி கரூர், அக்டோபர் 10 ம்தேதி தருமபுரி, அக்டோபர் 16 ம்தேதி கன்னியாகுமரி, அக்டோபர் 23 ம்தேதி விருதுநகர், அக்டோபர் 30 ம்தேதி திருச்சி, நவம்பர் 4 ம்தேதி - தேனி, நவம்பர் மாதம் 8 ம்தேதி திருவாரூர் , நவம்பர் 11 ம்தேதி திருநெல்வேலி, நவம்பர் 18 ம்தேதி சிவகங்கை நவம்பர் 22 ம்தேதி தூத்துக்குடி, நவம்பர் 29 ம்தேதி தஞ்சாவூர், டிசம்பர் 2 ம்தேதி -கோயம்புத்தூர், டிசம்பர் 9 திண்டுக்கல் டிசம்பர் டிசம்பர் 16 ம்தேதி ராமநாதபுரம், டிசம்பர் 23 ம்தேதி நாகப்பட்டினம், டிசம்பர் 30 ம்தேதி , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், ஜனவரி 2018-ல் நிறைவு விழா சென்னையிலும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது.மேலும் நாளை30 ம்தேதி மதுரை, பாண்டி கோயில், அம்மா திடலில் தொடக்க விழா மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top