புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் அதனை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறையின் அதிகாரி கூறுகையில், முதல்கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் என தெரிகிறது என்றார்.

அண்மையில் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14–ந் தேதி வரை ரூ.15.22 டிரில்லியன் அளவிலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top