மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பில் மத்திய அரசு சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அருங்காட்சியகம், நினைவு மண்டபம், நூலகம் ஆகியவைகளும் எழுப்பப்பட்டுள்ளன.

அப்துல்கலாமின் 2-வது நினைவு தினமான நாளை காலை 11 மணி அளவில் இந்த நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் சென்று பின்னர் காரில் பேய்க்கரும்பு செல்கிறார்.பிரதமரை வரவேற்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று இரவு மதுரை செல்கிறார்கள். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் இருவரும் பிரதமருடன் ஹெலிகாப்டரில் மண்டபம் செல்கிறார்கள்.

நினைவு மண்டபத்தை பிரதமர் திறந்து வைக்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கலாம் சலாம்’ என்ற பள்ளி மாணவ மாணவியர் பாடுகின்றனர். ‘கலாம் 2020 என்ற அறிவியல் வாகனத்தை கொடியசைத்து மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கலாம் நினைவிடத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. 45 அடி உயரத்தில் 4 டன் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி ஏவுகணையை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 2 மணி அளவில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி புறப்படுகிறார். மோடி வருகையையொட்டி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அப்துல்கலாம் நினைவிடம், பிரதமர் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம் பொதுக்கூட்டம் மைதானம் ஆகியவற்றை சிறப்பு அதிரடிப்படை நேற்றே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மாவட்ட கலெக்டர் நடராஜன், டிஐஜி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வையொட்டி ராமேஸ்வரம் கோவில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என்றும் பக்தர்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமநாதபுரம், ராமேஸ்வரம் வழித்தடத்தில் பயணிக்க வேண்டாம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top