தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இடையே சம்பளம், பயணப்படி உள்ளிட்ட விவகாரங்களில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி நடிக்கும் காலா, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்பட சுமார் 42 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் மலையாளம், தெலுங்கு பட தொழிலாளர்களை வைத்து விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பு வெவ்வேறு இடங்களில் நடக்கிறது. இந்த விவகாரத்தால் இன்றும் 2வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.

இதனிடையே பெப்சி பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் இன்று கூறும்போது, ‘இன்றும் படப்பிடிப்புகள் தடைபட்டிருக்கிறது. இதனால் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தொழிலாளர் நல ஆணையர் பாலசந்தரிடம் பெப்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரையும் (பெப்சி-தயாரிப்பாளர் நிர்வாகிகளை) அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடக்க ஆணையர் அழைப்பு விடுத்திருக்கிறார்” என்றார்

இது குறித்து விசாரித்த போது பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை பேச்சுவார்த்தை வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்றனர்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், “எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று 'வேலைநிறுத்தம்'. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்”என்று தெரிவித்துள்ளார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top