சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாங்கியான் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் 100 பேர் இறந்திருக்கலாம் எனவும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கான பேர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்களில் உள்ள டைல்கள் உடைந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாகாண தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top