கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் இறந்து விட்டனர். மீதமுள்ள 21பேரில் 10 பேருக்கு தண்டனை வழங்கிய தஞ்சை மாவட்ட நீதிமன்றம், மீதமுள்ள 11 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தாளாளர் சரஸ்வதி இறந்துவிட்டார். இதையடுத்து, மற்ற 9 பேரும், தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட், தண்டனை பெற்ற 9 பேரில் ஏழு பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். மேலும், ஆயுள் தண்டனை பெற்ற பள்ளி நிறுவனர் பழனிச்சாமியை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். இதே போல், சமையல்காரர் வசந்தியின் தண்டனையையும் உறுதி செய்தார். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலம் போதுமானது என நீதிபதிகள், தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்படி உள்ளதாக தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையிடு செய்ய வேண்டும் என்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top