பருகும் நீரும் வியாபாரமயமாக்கப்பட்ட பின் தண்ணீர் வெறும் தண்ணீராக மட்டுமே கிடைப்பதில்லை, தாதுக்கள் நிரம்பிய தண்ணீர், சுவையூட்டப்பட்ட தண்ணீர் எனப் பல ரகங்களில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. சுவையூட்டப்பட்ட  தண்ணீர் ரகங்களில் பெரும்பாலும் பழங்களின் சத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். உண்மையிலேயே, நமக்கு அந்த சத்துகள் கிடைக்கிறதா?.அண்மையில், லண்டனில் கடல்பாசி நிரப்பப்பட்ட குடிநீர் வகைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தன. மருத்துவர்கள், ’’குடிநீரில் கலக்கப்பட்ட கடல்பாசி  ஊட்டச்சத்து பலனை இழந்துவிடும், அதனால் அந்த தண்ணீர் பயனற்றது’’ எனக் கூறினார்கள். ஆனால் ஒருசில பழ வகைகள் தண்ணீரில் கலக்கப்படும்போது, அதன் ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு, ஸ்ட்ராபெர்ரி அல்லது எலுமிச்சைத்  துண்டை தண்ணீரில் கலந்து பருகினால், ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கும். தவிர ஆரஞ்சு, சாத்துக்குடி, கேரட், புதினா போன்றவற்றின் துருவலையும் தண்ணீரில் கலந்து பருகலாம். இதனால் செயற்கை பானங்களைத் தவிர்ப்பதுடன் உடலுக்கு இன்ஸ்டன்ட் எனர்ஜியும் கிடைக்கும்.

 

 

-ஐஷ்வர்யா

 
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top