உலகில் இப்போதைக்கு 1.8 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும் ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 150 முறைக்கு மேல் ஸ்மார்ட்போனைப் பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால். இந்த ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் குட்டிக் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் சோகம்.

உலகளவில் 11 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளில் 70 சதவீதம் பேருக்கு, மொபைல் போனை பயன்படுத்த தெரிந்திருக்கிறது. இது 14 வயதுள்ளவர்களில் 90 சதவீதமாக உள்ளது. மேலும் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் 10 வயது முதல் 13 வயது உள்ளவர்களில் 56 சதவீதத்தினர் சொந்தமாக மொபைல் வைத்துள்ளார்கள்.

அதுனால் அந்த காலத்துலே ஓடியாடி விளையாடிய பாப்பாக்கள் இப்போது ஸ்மார்ட் திரையில் விரல் நுனியில் விளையாடி மகிழ்கின்றனர். அப்படி ஓடி விளையாடுவது தடைபடுவதால் அவர்களது இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதையொட்டி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் குழந்தையில் உடல் பருமன் அதிகரிக்கிறது. அத்துடன் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகவே குழந்தைகள் மாறும் அபாயம் உள்ளது என்றும் இதன் காரணமாக மன நல ஆலோசகரிடம் காட்ட வேண்டிய சூழலும் ஏற்படலாம்- என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள் .

அது மட்டுமின்றி சுட்டிகளின் படிப்பு பாதிப்பதுடன் வயதுக்கு மீறிய விஷயங்களையும், தேவையில்லாத விவகாரங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. அதுனால் ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை அளவோடும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அதற்கு பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்கள்!.
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top