108 மருத்துவ சேவையை போலவே 104 மருத்துவ உதவி மையமும் 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மருத்துவத் தொடர்பான தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் புகார் தெரிவிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் மையமாக செயல்பட்டது.

இதையடுத்து கண்தானம் செய்ய விரும்புவர்கள், உடல் உறுப்புகள் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 104 உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 104 சேவையை பயன்படுத்தும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இன்று முதல் தமிழகம் முழுவதும் எங்கிருந்தும் முதியவர்கள் அவசர மருத்துவ உதவிக்கோ, மனநல ஆலோசனைக்கோ டெலிபோன் மூலம் பெறலாம். 24 மணி நேரமும் இந்த உதவி மையம் செயல்படும். இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 104 சேவை மைய அலுவலகமான சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. இதில் முன்னாள் டீன் கனகசபை, மூத்த குடிமக்கள் சங்கத் தலைவர் கேப்டன் சிங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

அவர்கள் பேசும்போது, "உலகத்திலேயே அதிக முதியவர்கள் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. முதியவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனிமையில் விடப்படும் பெற்றோர்கள் (முதியவர்கள்) மன அழுத்தத்திற்கு ஆளாகி நாளடைவில் மன நோயாளி போன்றே மாறிவிடுகின்றனர்.

இதில் இருந்து அவர்கள் விடுதலை பெற 104 சேவை மையத்திற்கு தொடர்புகொண்டு தங்கள் பிரச்சனையைக் கூறினால் உளவியல் ஆலோசனை வழங்கப்படும். மேலும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கான வழிமுறைகளையும், எங்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற விவரங்களையும் வழங்குகிறார்கள். முதியவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், மிரட்டல் போன்றவை குறித்தும் புகார் தெரிவிக்கலாம். வீட்டில் இருந்தபடியே போன் செய்தால் போதும் அவர்களுக்கு ஆறுதலும், மன நிம்மதி கிடைக்கக் கூடிய ஆலோசனைகளும் 104 சேவை மூலம் வழங்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தார்கள். 
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top