கடந்த வாரம் சர்வதேச ஜெர்னல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டிருந்த ஆய்வு அறிக்கையில், நகர்புறங்களில் வசிப்பவர்களை விட கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு தான் தொப்பை அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது. இதே போல் ஆண்களை விட 2.71 மடங்கு அதிகமாக பெண்களுக்கு தான் தொப்பை உள்ளது. இந்திய வீடுகளில் சமையல், துணி துவைத்தல் உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மையமாகி மாறி விட்டதே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நமது உடல் எப்படி செயல்படுகிறது என்று கேட்டல் அது ஒரு எந்திரம் மாதிரிதான் என்று தான் குறிப்பிட வேண்டும். எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் எந்தளவு தேவையோ அதே போல் நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அப்படியான கலோரியை நமது உடல், நாம் நேரம்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அந்த உணவின் மூலம் பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவு போட்டு விடுகிறது.

ஆனாலும் இந்த உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் பாதுகாப்பான உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. அதாவது உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்கள் பக்கமே இந்த அதிகப்படியானக் கொழுப்பை போக விடாமல் உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். உடனே மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போதே நாம் எச்சரிக்கையாக இல்லை யென்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படி வயிற்றைச் சுற்றித் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது பலரது கனவாக இருக்கலாம். இதற்கு அழகான உடலமைப்பை பெற வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமாக இருந்தாலும், உடலில் தேங்கியுள்ள கொழுப்பால் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்பதும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.

இப்போது உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவில் தொப்பை தொங்குகிறதா? அப்படியெனில் அவற்றைக் குறைக்க உங்களுக்கு ஒர் அற்புத பானத்தை இங்கே வழங்கியுள்ளோம் .அதை தயார் செய்து அவற்றை அன்றாடம் குடித்து வந்தால், நிச்சயம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை மட்டுமின்றி, உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ளதையும் குறைக்கலாம். இதனிடையே இந்த பானத்தை குடிக்கும் போது, தினந்தோறும் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து வர வேண்டும். மேலும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இனி., இப்போது அந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்று அறிவோமா?

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உள்ளது. இதுவும் எலுமிச்சை பழத்தைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருள். மேலும் இந்த பழம் ஜூஸிற்கு நல்ல சுவை மற்றும் மணத்தைத் தரும். அதே நேரம் இது கொழுப்புக்களை கரைக்கும் நொதிகளை வெளியேற்றி, கொழுப்பை கரைத்து எடையைக் குறைக்க உதவும்.

பார்ஸ்லி

அன்றாட உணவில் சிறிது பார்ஸ்லியை சேர்த்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், உடலின் நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு, ஆங்காங்கு தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, விரைவில் எடை மற்றும் தொப்பை குறைய உதவி புரியும்.

தண்ணீர்

அன்றாடம் தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக எடுக்கிறோமோ, அந்த அளவில் உடலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம். மேலும் தண்ணீர் உடலுறுப்புக்களின் சீராக இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

ஜூஸ்

செய்ய தேவையான பொருட்கள் எலுமிச்சை - 3 ஆரஞ்சு - 1 பார்ஸ்லி - 1 கொத்து தண்ணீர் - 2.5 லிட்டர்

ஜூஸ் செய்யும் முறை

முதலில் 2 எலுமிச்சையை பிழிந்து 2.5 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் மீதமுள்ள 1 எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை வட்ட துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பார்ஸ்லியை நறுக்கி சேர்த்து நன்கு கலந்து, நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரையும். (இத்துடன் முன்னரே சொன்ன உடற்படிற்சி செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்),
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top