ஸ்டார் டி.வி. யில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய போது கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஒன்பது மணிக்கெல்லாம் தொலைக் காட்சி முன்னால் ஆஜரானார்கள். இதே நிகழ்ச்சியை அமிதாப் நடத்தி முடித்தப் பிறகு பல்வேறு இந்திய தொலைக்காட்சிகளின் எல்லா சேனல்களும் அதையே தத்தம் மொழியில் மீண்டும் ஒளிபரப்பி பெரும்பாலான மொழிகளில் மக்களையும் ஈர்த்தது.

இதனிடையே சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், அதே ஸ்டார் சேனலுடன் மறுபடியும் இணைந்துள்ளார் அமிதாப். பிரபல ஆங்கில சேனலான பி.பி.சி.-ல் வெளிவந்து மக்களின் மனதை அள்ளிய ‘டுநைட் ஈஸ் த நைட்’ என்கிற நிகழ்ச்சியை ஸ்டார் பிளஸ் சேனலுக்காக அமிதாப் நடத்த இருக்கிறார். ‘ஆஜ் கி ராத் ஹே ஸிந்தகி’ (இன்று இரவு மட்டும் வாழ்க்கை) என பெயரில் தயாராகும் இந்நிகழ்ச்சி வாழ்நாளின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பல்வேறு நடிகர்களின் சிறப்பை எடுத்துரைப்பதாக வெளிவரும்.

உலகளவில் மக்கள் ரசித்த இந்நிகழ்ச்சி இந்திய சின்னத்திரையில் திரும்பவும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சிக்காக இளமை துள்ளலுடன் அமிதாப் பச்சன் நடனமாடும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அது இதோ:மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top