தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகரான சாய்பிரசாந்த் நேற்றிரவு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் காம்பியராக அறிமுகமாகி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ளனர். சாய்பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இந் நிலையில், நேற்று மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாய்பிரசாந்த் வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மன உளைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென எழுதி வைத்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான சாய் பிரசாந்த், நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்



© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top