விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர். தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாடகர்கள் கலந்துகொள்வார்கள். அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்பார்கள்.

அதன்படி கடந்த ஓராண்டாக நடந்து வந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5 தனது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, இதன் கிராண்ட் ஃபினாலே லைவ் இன்று - மார்ச் 18 ஆம் நாள் சென்னை D B ஜெயின் காலேஜ் மைதானத்தில் மாலை 6 மணி முதல் நடக்கும் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். கடந்த பல வாரங்களாக பல பாடகர்கள், வித்வான்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்த ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் ஃபரிதா (SS02), ஆனந்த் அரவிந்தாக்ஷன் (SS05), சியாத் (SS04), ராஜ கணபதி (SS03) மற்றும் லக்ஷ்மி ப்ரதீப் (SS07) ஆகியோர் அந்த பிரமாண்ட மேடையில் பாட தயாராக இருக்கிறார்கள்

தற்போதைய இறுதிச்சுற்றில் போட்டியிடும் 5 பேரில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியை வெல்லப் போகிறார் என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களிலும் சூப்பர் சிங்கரின் இறுதிச்சுற்று பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ. 500, ரூ. 1500, ரூ. 3000 என்கிற விதத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சி, விஜய் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்றும் இதில் தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சூப்பர் சிங்கர் இறுதிச் சுற்றுக்கு ஆன்லைனில் வாக்களிக்க: http://www.supersinger.inமேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top