விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'சூப்பர் சிங்கர்'.தமிழகத்தின் 'பிரமாண்ட குரலுக்கான தேடல்' என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் 6 மணி முதல் நடைபெற்று இரவு 12 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று தாமதமாக 12.45 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் ஆலுமா டோலுமா பாடலைப் பாடிய ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், ராஜ கணபதிக்கு நடுவர்களின் விருது மட்டுமே கிடைத்தது. வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் ஃபரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள்.

முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

முதல் இரு இடங்களைப் பிடித்த ஆனந்த், ஃபரிதாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதி அளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் 5 முடிவுகள்

1. ஆனந்த்

2. ஃபரிதா

3. ராஜகணபதி (நடுவர் விருது)

4. லட்சுமி

5. சியாத்மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top