சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு குப்பத்துச் சிறுவர்களுக்கு, பீட்சா சாப்பிடும் ஆசை வருகிறது. அந்த ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதை ஏகப்பட்ட அரசியலுடன் மிக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன்.

சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் தொடங்கி, படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களுமே மிக இயல்பாக நடித்திருப்பது அழகு. அதுவும் வளர்ந்து வரும் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ், இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக... அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார்.

அடுத்தது என்ன என்று யோசிக்க முடியாதபடி பரபரவென நகர்கிறது திரைக்கதை. ஜி.வி.பிரகாஷின் இசையும், மணிகண்டனின்  ஒளிப்பதிவும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. இரண்டு தேசிய விருதுகள், சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தை, நடிகர் தனுஷும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்துள்ளனர். அதற்காகவே இருவருக்கும் மிகப்பெரிய சல்யூட்!
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top