சன் மியூசிக் ‘கிரேஸி கண்மணி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி தியாவிற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த இன்டோர் கிரிக்கெட் டீம் கேப்டன் கார்த்திக்கிற்கும் ஜுன் மாத மத்தியில் திருமணம் நடைபெறவுள்ளது. செய்தி அறிந்ததும் அவரைத் தொடர்பு கொண்டால், ‘இது பக்கா காதல் திருமணம் ஜீ, ஆனால் நாங்க லவ் பண்ணலை’னு குழப்புகிறார். தெளிவா பதில்களையும் கேட்டறிந்தோம்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என் பிறந்தநாளில் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என் நண்பர்களால் என் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் தான் கார்த்திக். யாரென்று தெரியாத ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்து நமக்கே வாழ்த்து சொன்னா சர்ப்ரைஸ்ஸா தானே இருக்கும். அப்படி ஒரு நிகழ்வில் தான் நாங்க சந்திச்சோம். அதற்கு அடுத்த நாளிலிருந்து நாங்க நண்பர்களாக பழகினோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. அது நாளடைவில் காதலாக மாறிடிச்சு. வீட்டிலும் எதிர்ப்புகள் வரலை. சந்தோஷமாக கல்யாணம் பண்ணப்போறோம் ஜீ” என்று சந்தோஷம் பொங்க முடித்தார் தியா மேனன்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top