குழந்தை அழும் போது, அவர்கள் பசிக்காக அழுகிறார்களா, டையாபரை மாற்றுவதற்காக அழுகிறார்களா, சூடு அல்லது குளிரை உணர்ந்து அழுகிறார்களா, அவர்களுக்கு அரவணைப்பு தேவைப்படுகிறதா அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காக அழுகிறார்களா என்பதை கவனியுங்கள். குழந்தைகள் அடிக்கடி அழுகிறார்கள் என்றால் வயிற்று வலியாகக் கூட இருக்கலாம். அதை போக்க சில வீட்டு வைத்தியம்:

• சிறுதளவு ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சவும். காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். ஒரு டீ ஸ்பூன் அளவில் கொடுத்து வந்தால் வலி குறையும்.

• சீரகம் குழந்தைகளது குடலுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும் தன்மையுடையது.

• குழந்தைகள் தொடர்ச்சியாக வயிற்று வலியினால் அழும் போது, அவர்களுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு வலி குறைவதோடு, நல்ல தூக்கமும் வரும்.

• வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீரானது ரொம்ப சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் குழந்தையின் தொண்டையானது மிகவும் மென்மையாக இருக்கும்.

• பெரும்பாலும் குழந்தைக்கு வாயுவால் நிறைய வயிற்று வலியானது வரும். ஆகவே குழந்தைகளுக்கு ஏப்பம் வரவைக்க வேண்டும் அவ்வாறு ஏபபம் வருவதற்கு, குழந்தைகளுக்கு வயிற்றில் விரல்களால் மசாஜ் அல்லது உட்கார வைத்து முதுகில் செல்லமாக தடவி கொடுக்க வேண்டும்.

• கிரேப் வாட்டர் கொடுத்தாலும் வலி நின்றுவிடும். அதனால் எந்த ஒரு பக்கவிளைவும் வராது.

• வயிற்று வலிக்கு பெருங்காயத்தூளை லேசான சுடு நீரில் கரைத்து வயிற்றில் தேய்க்க வேண்டும். அல்லது விளக்கெண்ணெய்,ஆலிவ் ஆயில் ஏதாவது ஒன்றை வயிற்றில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

 
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top