மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அருகில் உள்ள போபசாரி பகுதியைச் சேர்ந்த ரூபாலி ஹிங்கன்கரின் மகன் ஸ்ரீஜித். ஸ்ரீஜித் பிறக்கும்போது இரண்டரை கிலோவாக இருந்தான். இப்போது அவனுக்கு 18 மாதமாகிறது. இந்த குறுகிய காலத்தில் ஸ்ரீஜித் 22 கிலோ எடையுடன் உள்ளான். பிறந்தது முதல் எப்போதும் பசிக்கு அழுது கொண்டே இருக்கிறான். பசிக்காக உணவு கொடுப்பதால் ஸ்ரீஜித் உடல் எடை அதிகரிப்பதாக கருதப்பட்டது. எனினும், ஸ்ரீஜித்தின் அபார வளர்ச்சியைக் கண்ட டாக்டர்கள், உடனடியாக குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து மும்பையில் உள்ள ஜேஸ்லாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீஜித்துக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் பசியை கட்டுப்படுத்தும் லெப்டின் என்ற ஹார்மோன் பிரச்னையால், ஸ்ரீஜித்துக்கு அபார பசியும், அதனால் அபார வளர்ச்சியும் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நோய்க்கு இந்தியாவில் மருந்துகள் இல்லாத நிலையில், இப்போது இங்கிலாந்தில் இருந்து மருந்துகள் வரவழைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒன்றரை வயதில் அதீத எடையுடன் இருப்பதால் ஸ்ரீஜித்தால், சுவாசிக்க முடியவில்லை. மேலும், உடல் எடையைத் தாங்கி, உட்காரவும் முடியவில்லை. இந்தியாவில் லெப்டின் ஹார்மோன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தையில், ஸ்ரீஜித் இரண்டாவது குழந்தை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூன்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top