கபாலி, லிங்கா கோச்சடையான் என அடுத்தடுத்து பாக்ஸ் ஆபீஸ் சரிவுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் இமேஜை மாஸ் எண்ட்ரியாக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட படம். சொல்லத் தேவையில்லை, எதிர்பார்ப்பைப் போலவே எண்ட்ரி மாஸாகவே அமைந்திருக்கிறது. டைரக்டர் ரஞ்சித்துக்கு இது மூன்றாவது படம். ’மெட்ராஸ்’ பட வெற்றிக்குப் பிறகும் புது மாதிரியான கதைக்களத்தை எடுத்துக் கொள்வார்..ஆனால் எம்மாதிரியான படம் இயக்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். அப்பேர்பட்ட ரஜினிக்காக இப்பேர்பட்ட ரஞ்சித் என்ற அடையாளத்தையும் சமரசம் செய்து கொள்ளாமல் அதே சமயம் ரஜினி என்கிற ஃபினாமெனானின் தன்மை மறைந்து விடாமல் சமன் செய்து கொண்டு கபாலியைத் தந்திருக்கிறார்.

இருபத்தைந்து வருடங்களுப் பிறகு சிறையிலிருந்து வெளியேறுகிறார் கபாலி, அதே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தான் சிறைக்குச் சென்றதால் எதையெல்லாம் செய்ய முடியாமல் போனதோ அவற்றை எல்லாம் முடிக்கிறார், தாதா! மக்கள் தலைவன்! போன்ற பல பரிமாணங்களில் பார்க்கப்படும் கபாலி என்கிற கபாலீஸ்வரன். இடையே குடும்பம், நட்பு, உறவு என எமோஷனல் பக்கங்களைத் தன் பாணியிலேயே சொல்லியிருக்கிறார் ரஞ்சித். ரஜினி தன்னை முழுக்க இயக்குனரின் நடிகராகவே ஒப்படைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்காகவே ரஜினிக்கு என ஒரு தனி ஆட்டிட்யூட்(attitude), இன்னும் மெருகேற்றப்பட்ட ஸ்டைல், ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஒவ்வொரு அசைவுகளையும் செதுக்கியிருக்கும் விதம் என ரஞ்சித் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார், பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் படங்களின் நாயகிகள் பாடல் டான்ஸ் இரண்டு மூன்று முக்கிய சீன்களில் வசனம் என்று மட்டுமே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிடுவார்கள், விதிவிலக்காக ராதிகா ஆப்தேவுக்கு ஒரு மக்கள் தலைவனின் மனைவி என்பதற்கு ஏற்றபடியான மிடுக்கான கதாபாத்திரம். ஷாட் பை ஷாட்டாக வந்து போனாலும் அவருக்குத் தரப்பட்டிருக்கும் வசனங்களும் அதை அவர் கையாண்டிருக்கும் விதமும் சிறப்பு. ரஜினிக்கும் ராதிகாவுக்கும் இடையிலான நரைமுடி ரொமான்ஸ் அழகு!.

ரஜினியின் ஆகச்சிறந்த பாஸிடிவ் சைட் என்றால் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையும் தாண்டி அவருக்குள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஹ்யூமரிஸம் மட்டுமே டான் என்பதாலேயே அவருக்குத் தரப்படாமல் தவிர்க்கப்பட்டுவிட்ட ஹ்யூமரிஸத்தை ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஏற்று நடித்திருப்பது சிறப்பு. ‘டான்’ ஆகத்துடிக்கும் ஒரு கத்துக்குட்டி பையன் ஒரு பெரிய டான் அருகில் எப்படியெல்லாம் இருப்பானோ அப்படியெல்லாம் இருக்கிறார். பெர்ஃபக்ட் பிட் ஃபார் தி ரோல் எனச் சொல்லலாம்.

அப்படி மற்றொரு பொருத்தமான ரோல் என்றால் சாய் தன்சிகா. பாய் கட் லுக், ஆக்‌ஷன் காட்சிகளில் கபாலி ரஜினியையே தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவுக்கு ஸ்கீர்ன் ப்ரெஸன்ஸ் மற்றும் நடிப்பு என இன்னொரு ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோயின்கள் அளவுக்கு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

மற்றபடி சிதறல் சிதறலாக ‘மெட்ராஸ்’ படத்தின் அதே பட்டாளம் இந்தப் படத்திலும் இருக்கிறது. கபாலியாக நடிக்கும் ரஜினிக்கு அடுத்து படத்தின் மிகப் பெரும் ப்ளஸ் ரஞ்சித்தின் வசனமும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும். குறிப்பாக டானாக ரஜினி எண்ட்ரியாகும் காட்சிகளிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கிடார் அதகளம் செய்கிறது. முரளியின் கேமிராவில் ஸ்லோ மோஷன் காட்சிகள் கண்களில் விரலை விட்டு பேசுகின்றன.

அனாலும் சில இடங்களில் மைனஸாகத் தெரிவது ரஞ்சித் ’ரஜினி’ என்னும் மாஸ் ஹீரோவைத் தன் அரசியல் வசனங்களைப் பேச வைத்திருப்பது டைரக்டரின் பெரும் வெற்றி என்றாலும், சூப்பர் ஸ்டார் ரஜினி ஏதாவது ஒரு ஐகானிக் பஞ்ச் டயலாக் பேசுவார் என்று அவரது பெரும்பான்மையான ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்து நகம் கடித்துக்கொண்டு பெரிதும் எதிர்பார்த்து, ஆராவாரத்துடன் விசிலடித்துக் கைத்தட்டக் காத்திருந்த அவர்களுக்கு ரஞ்சித்தின் அரசியல் பின்னணி வசனங்கள் ஏமாற்றத்தைத்தான் தந்து விட்டது.

இதனிடையே ரஜினி படங்கள் என்றாலே ரஜினியை எந்தளவிற்கு ஹீரோவாகக் காண்பிக்க வேண்டுமோ அதே அளவிற்கு வில்லனை படு வில்லனாகக் காண்பிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சைனாக்கார வில்லன் தமிழ் வசனம் பேசுவதாலோ என்னவோ டோனியாக நடிக்கும் வின்ஸ்டன் இண்டர்வலுக்குப் பிறகான பகுதிகளில் எடுபடாமலே போகிறார். பொன்னம்பலம் அளவிற்கு இல்லைனாலும் கொஞ்சம் ஸ்டாராங்கான வில்லனாக இருந்திருக்கலாம் ரஞ்சித் சார்!

ஆக..ஒரு வரியில் சொல்வதானால் கபாலி- ரஜினிக்கும் இரஞ்சித்துக்கும் இடையே.!!?

ஐஷ்வர்யா
இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top