கார் அல்லது பஸ்சில் போகும் போது மழையோ அல்லது பனியோ விழுந்தால் ’ஹவைப்பர்' மேலும், கீழும் அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் இது போன்ற ஹவைப்பரெல்லாம்' நம் கண் இமைகளுக்கு நிகராகாது என்று சொன்னால் மிகையல்ல. ஆம்..நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து ஹவைப்பரை போலவே பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை.

அதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும் எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கிறது. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயபடுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் நான் அழுகிறோம் என்றே கூறலாம்.

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்! கண்களுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் இது போல் அடிக்கடி இமைகள் துடிக்கும்.

இதனிடையே பெண்களுக்கு முகத்தை அழகாக காட்டுவதில் கண்களுக்கும் பங்குண்டு. இதற்காக நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் கண் இமைகளை அழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்கலாம்.

இதோ கண் இமைகள் வளர சில டிப்ஸ்...

Ø ஆமணக்கெண்ணை ஒரு மருத்துவகுணம் வாய்ந்த பொருள். தினமும் ஆமணக்கெண்ணையை உறங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும்.தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவி வர, கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.

Ø தினமும் கண் இமைகளை தலை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை விட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் விட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய்வைத்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதானால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் எதனை தினமும் செய்தல் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.

Ø தினமும் இமைகளை சுத்தமான சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சீப்பானது சிறிதாகவும் இருக்கலாம் அல்லது மஸ்காரா பிரஸ் வைத்து சீவலாம்.அதிலும் ஏதேனும் ஒரு இயற்கை எண்ணெயில் நனைத்து சீவினால் நல்லது. கண் இமைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சீவ வேண்டும்.

Ø ஆமணக்கெண்ணை/விட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையை தரும். இரவில்படுக்கும் முன் கண் இமைகள் மீது வஸ்லினை தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவிவிட வேண்டும்.

Ø நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப்பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோடீன் உணவை உண்ணவேண்டும். மீன், பருப்புவகைகள், நட்ஸ் மற்றும் புரோடீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். இப்படி எல்லாம் செய்தால் கண் இமை முடியானது அழகாக, அடர்த்தியாக, நீளமாக வளரும். ஆனால் இதற்கு நிறைய பொறுமை வேண்டும். மேலும் இவற்றை எல்லாம் தினமும் செய்யவேண்டும், இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

பிருந்தாமேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top