கிரிக்கெட் விளையாட்டில் பிரபலமானது டெஸ்ட் கிரிக்கெட்தான். முதலில் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டிகள் விளையாடினார்கள். டெஸ்ட் போட்டியில் ரசனை குறைந்ததால், ஒரு நாள் போட்டிகள் கொண்டு வரப்பட்டது. அதிலும் ரசிகர்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்பதால் இப்போது 20-20 போட்டிகள் பிரபலமாக உள்ளன. எனினும், டெஸ்ட் போட்டிக்கான பாரம்பரியத்தை எந்த நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் விட்டுக் கொடுக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 500வது டெஸ்ட் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது, மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக அமையும் என்று இரண்டு அணிகளும் நினைத்தன.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த 500வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன் குவித்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 262 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் கிடைத்த 56 ரன்களை வைத்துக் கொண்டு இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ராகுல் 38, முரளி விஜய் 76 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய புஜாரா 88, ரஹானே 40, ராகுல் சர்மா 68, ஜடேஜா 50 மற்றும் விராட் கோஹ்லி 18 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி 377 ரன்களை எட்டிய நிலையில், ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணியின் ரோஞ்சி 80, சான்ட்னெர் 71 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 236 ரன்களில் நியூசிலாந்து பத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால், இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றிபெற்றது.

இதன் மூலம் இந்தத் டெஸ்ட் தொடரை 1-0 என்ற நிலையில், முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்களையும் கைப்பற்றியதுதான். மொத்தம் பத்து விக்கெட்களை கைப்பற்றியதுடன், அதிவிரைவாக 200 விக்கெட்களை கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக அஸ்வின் உருவாகியுள்ளார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top