மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் லால் நடிப்பில், இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் புலி முருகன் படம் கடந்த 7ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் கமலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, பாபு மற்றும் லால் உட்பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் மலையாளத்தில் வெளியான நாளில் இருந்தே வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. பிரேமம், என்னு நின்டே மொய்தீன் உட்பட பல படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது.

இந்நிலையில், புலிமுருகன் படத்துக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் காட்சிகளைத் தொடங்காமல் குளறுபடி செய்கின்றனர் என்பது உட்பட பல்வேறு புகார்கள் கேரள மாநில மனித உரிமை ஆணையத்துக்குச் சென்றது. இந்தப் புகார்களின் அடிப்படையில், புலிமுருகன் படத்துக்கான கட்டண நிர்ணயம், காட்சி நேரங்கள் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி கேட்டு படத் தயாரிப்பு குழுவுக்கும், அரசுக்கும் கேரள மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top