பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் புதுப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு நூதன முறையில் செயல்பட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்தவகையில் பாலிவுட் நடிகரும் பிரபல மாடலுமான ஜான் ஆப்ரஹாம், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் இணைந்து நடித்த "போர்ஸ் 2' என்ற அதிரடி ஆக்ஷன் படம் நவம்பர் 18ம் தேதி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் படம் என்பதுடன், போலீஸ் ஸ்டோரி போன்று விறுவிறுப்பாக செல்லும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, தங்கள் படத்துக்கு மட்டுமின்றி போலீசார் மற்றும் ராணுவத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜான் ஆப்ரஹாம், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் இணைந்து டெல்லியில் உள்ள அமர்ஜோதி ஜவான் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ஜான் ஆப்ரஹாம் கூறுகையில், ""போலீசாரும், ராணுவத்தினரும் நம் நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்காக எந்தளவுக்கு தியாகம் செய்கின்றனர் என்பதை விவரிக்கும் படம். இந்தப் படத்தில் தாஹிர் ராஜ் பாஷின், ஜெனீலியா டி சௌஷா, பாரஸ் அரோரா, நரேந்திர ஜா உட்பட முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்தப் படம் தேசப்பற்றுக்கு உதாரணமான ஒரு படமாக இருக்கும்'' என்றார்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top