கூர்மையான பற்களை கொண்டு, உயிரினங்களின் இரத்தை இரவில் வந்து குடிக்கும் ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் 'வேம்பயர்ஸ்''. அதேபோல் பகலில் மனிதனாகவும், இரவில் ஓநாயாகவும் மாற கூடிய மற்றொரு கற்பனை கதாபாத்திரம் - 'லைக்கன்ஸ்'. இந்த இரண்டையும் மைய கருத்தாக கொண்டு உருவான ''அண்டர்வேர்ல்ட் - தொடர், ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.....ஹாலிவுட்டை தொடர்ந்து தற்போது இந்திய ரசிகர்களையும் ஈர்க்க தயாராக இருக்கின்றது, அண்டர்வேர்ல்ட் தொடரின் ஐந்தாம் பாகம் - 'அண்டர்வேர்ல்ட் - பிளட்வார்ஸ் - 3d' திரைப்படம் . வருகின்ற டிசம்பர் மாதத்தில், இந்தியா முழுவதும் வெளியாகும் இருக்கும் இந்த திரைப்படத்தை ஹேனா போர்ஸ்டெர் இயக்க, கேட் பெக்கின்சேலே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

"நான் பணியாற்றிய புத்திசாலித்தனமான பெண்களில் ஒருவர் கேட்...'செலேனி' கதாபாத்திரத்திற்கு தன்னுடைய அசாதரண நடிப்பால் புத்துயிர் கொடுத்திருக்கிறார் கேட். தனக்கு நெருக்கமானவர்களை, தன்னோடு அன்பாக இருப்பவர்களை முதல் பாகத்தில் இழந்து விடுவாள் செலேனி....அதனால் ஏற்பட்ட கோபம் அவளை வலிமையாகவும், தைரியம் மிகுந்த பெண்ணாகவும் மாற்றுகிறது.... அப்படி ஒரு செலேனியை தான் ரசிகர்கள் இந்த பாகத்தில் பார்க்க இருக்கிறார்கள்.....புத்தம் புதிய குணங்களை உள்ளடக்கி இருக்கும் செலேனி கதாபாத்திரத்தை மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனமும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்...." என்கிறார் இயக்குநர் ஹேனா போர்ஸ்டெர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top