மலையாள திரையுலகில் முக்கிய நடிகரான திலீப்குமார், நடிகை மஞ்சுவாரியாரை 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு பேரும் 14 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், திலீப்குமார் மஞ்சுவாரியார் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. 2014ம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்துக் கேட்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதன் பின்னர் நடிகர் திலீப்குமாரும் இணைந்து மனு தாக்கல் செய்தார். இவர்கள் இவருக்கும் கடந்த ஆண்டு கோர்ட் முறைப்படி விவாகரத்து வழங்கியது. அப்போதே "நடிகை காவ்யா மாதவன் என் திருமண வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ளார். இதனால், நான் விவாகரத்து பெறுவதைத் தவிர வேறு வழியில்லை...'' என்று மஞ்சுவாரியார் கூறியிருந்தார்.

இதனிடையே மலையாள சினிமா உலகில் பரபப்பாக இருந்த மஞ்சுவாரியார் 2009ம் ஆண்டு, நிஷால்சந்திரா என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னர் குவைத்தில் செட்டில் ஆனார். எனினும், திருமணமான நான்கு மாதத்தில் காவ்யா நிஷால் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. காவ்யாவுக்கும், நடிகர் திலீப்குமாருக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக வெளியான தகவலால், பரஸ்பரம் விவாகரத்து கேட்டு காவ்யா மாதவனும் நிஷால் சந்திராவும் கோர்ட்டை நாடினர். 2010ம் ஆண்டு காவ்யாவுக்கு விவாகரத்துக் கிடைத்தது.

இதற்கிடையே, முறைப்படி விகாரத்து கிடைத்துள்ள நிலையில் காவ்யா மாதவனும், நடிகர் திலீப்குமாரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதை இருவரும் மறுத்தனர். மேலும், திலீப்குமாரின் மகள் மீனாட்சி, தன் தந்தையின் திருமணத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகளை சமாதானம் செய்த திலீப்குமார், காவ்யாமாதவனுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவந்தார்.

கொச்சியில் உள்ள கலூர் ஓட்டலில் இன்று காலை குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், மலையாள சினிமாவுலக பிரபலங்கள் படை சூழல் திலீப்குமார், காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது. காலை 9.50 மணிக்கு காவ்யாமாதவன் கழுத்தில் நடிகர் திலீப்குமார் தாலிகட்டினார். இந்தத் திருமணத்தில் நடிகர்கள் மம்முட்டி, ஜெயராம், நடிகைகள் மீரா ஜாஸ்மின், மேனகா சுரேஷ் உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஆகஸ்ட்-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top