உணவு, உடல்நலம்: மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்? – jannalmedia.com

உங்கள் மனநலம் என்பது, நீங்கள் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம். அப்படியானால் உணவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி உணவு நம்முடைய மனநலத்தை பாதிக்கும்?

உணவுக்கும் மனநலத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இரவும் பகலும் நம் உடலுக்குள் நடக்கும் இயக்கங்களை நமது மூளை கட்டுப்படுத்துகிறது.

மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆகவே, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மனநலத்துக்கு மிகவும் முக்கியம்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கேதார் திலாவே பேசும்போது, “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் உணர்வுகளை நேரடியாக பாதிக்கும்” என்கிறார்.

உணவுக்கும் மனநலத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? உணவுப்பழக்கங்கள் மனநலத்தை பாதிக்கின்றவா? எப்படி பாதிக்கின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு நிபுணர்களிடம் பேசி பதில்களைப் பெறலாம்.

- Advertisment -

Latest